கடந்த வாரம் அதானி குழுமத்தின் மீது அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக இந்திய பங்குச்சந்தை படு பாதாளத்தில் விழுந்தது. கடந்த வாரம் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை சரிந்ததால் லட்சக்கணக்கான கோடிகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏறும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிவில் தான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 30 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 295 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து 17,590 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.