Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஆண்டின் முதல் வர்த்தக நாள். சென்செக்ஸ், நிப்டி நிலை என்ன?

share
, திங்கள், 2 ஜனவரி 2023 (09:42 IST)
2022 ஆம் ஆண்டில் பங்குச்சந்தை சென்செக்ஸ் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பாசிட்டிவ் எண்ணமாக ஏற்பட்டுள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 140 புள்ளிகள் வரை உயர்ந்து 60 ஆயிரத்து 980 என்று வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 140 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஆண்டு பங்குச் சந்தை பாசிட்டிவ் ஆக இருக்கும் என்றும் சென்செக்ஸ் 70 ஆயிரம் வரை உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணு ஆயுதம் பத்தல.. இன்னும் நிறைய வேணும்! – கிம் ஜாங் அன் திட்டம் என்ன?