பங்கு வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் கட்டாததால் இந்திய பங்குச்சந்தைகல் பெரிய மாற்றமின்றி முடித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதை அடுத்து இன்று மும்பை பங்கு சந்தை காலையில் ஏற்றும் கொண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 125 புள்ளிகள் வரை உயர்ந்தது கிட்டத்தட்ட 59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது அதாவது 58 ஆயிரத்து 977 எந்த நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் வரை உயர்ந்து 17566 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று மொகரம் காரணமாக பங்குச்சந்தை விடுமுறையாக இருந்த நிலையில் இன்று பங்கு சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையில் பங்கு வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் கட்டாததால் இந்திய பங்குச்சந்தைகல் பெரிய மாற்றமின்றி முடித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36 புள்ளிகள் குறைந்து, 58,817 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகிறது.