பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அதானி விவகாரத்தை அடுத்து பங்குச்சந்தை இறங்கும் முகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 325 புள்ளிகள் சரிந்து 59,145 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 105 புள்ளிகள் சரிந்து 17,360 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில காலத்திற்கு பங்குச்சந்தை ஏற்ற இறப்பு தொடர்பான இருக்கும் என்றும் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் பங்குச்சந்தையை நுணுக்கமாக கவனித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.