பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நேற்று முன்தினம் 800 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் குறைந்ததால் முதலீட்டாளர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர்.
நேற்று பங்கு சந்தை விடுமுறை என்ற நிலையில் இன்று பங்குச்சந்தை தொடங்கியது முதல் மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 175 புள்ளிகள் சரிந்து 64 ஆயிரத்து 395 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 58 புள்ளிகள் சரிந்து 19225 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை தொடர் சரிவில் இருந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் விரைவில் பங்குச்சந்தை உயரும் வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.