கடந்த வெள்ளி என்று சென்செக்ஸ் சுமார் ஐநூறு புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 65 ஆயிரத்துக்கும் அதிகமான புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 372 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 19,358 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தகுந்த முதலீட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.