Publish Date: Wed, 15 Nov 2023 (10:54 IST)
Updated Date: Wed, 15 Nov 2023 (10:55 IST)
தீபாவளி வரை தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்கிக்கொண்டே வந்ததால் ஏராளமான பொதுமக்கள் தங்கம் வாங்கினார். ஆனால் தீபாவளி முடிந்ததும் தற்போது மீண்டும் ஏற்றம் கண்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5645.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 அதிகரித்து ரூபாய் 45160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6115.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48920.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 170 காசுகள் அதிகரித்து ரூபாய் 77.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது