Publish Date: Wed, 13 Dec 2023 (11:21 IST)
Updated Date: Wed, 13 Dec 2023 (11:23 IST)
கடந்த ஒரு வாரத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 1000 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ள நிலையில் இன்றும் தங்கம் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5700.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 45600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6170.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49360.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது