Publish Date: Fri, 15 Dec 2023 (10:42 IST)
Updated Date: Fri, 15 Dec 2023 (10:44 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராம் பத்து ரூபாய் உயர்ந்து 5830 என விற்பனை ஆகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு கிராம் 6000 என விற்பனையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது