மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் நேற்று 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி விவகாரம் மற்றும் அமெரிக்க வங்கிகள் திவால் விவகாரம் காரணமாக பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 250 புள்ளிகள் உயர்ந்து 58,325 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 78 புள்ளிகள் உயர்ந்து 17,184 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை இதே போல் தொடர்ச்சியாக உயர்ந்து மீண்டும் 60 ஆயிரத்தை சென்செக்ஸ் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.