Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:30 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் சென்செக்ஸ் 83 ஆயிரத்துக்கும் அதிகமாக தற்போது விற்பனையாகி வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது என்பதும் சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்ந்து 83 ஆயிரத்து 50 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நான் நிப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 25,404 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்று மாலைக்குள் இன்னும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments