Publish Date: Tue, 21 Nov 2023 (10:50 IST)
Updated Date: Tue, 21 Nov 2023 (10:53 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியபோது ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்றுமுன் 240 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 65 ஆயிரத்து 892 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் 66 ஆயிரத்தை சென்செக்ஸ் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 19,700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது