இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களில் படுவீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் 1600 புள்ளிகளும் நேற்று சுமார் 300 புள்ளிகளும் என இரண்டு நாட்களில் சுமார் 2000 புள்ளிகள் பங்குச்சந்தை சரிந்தது.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஓரளவு ஏற்றம் கண்டு இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்ந்து 71788 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 21,635 என்ற புள்ளிகளை வர்த்தகமாகி வருகிறது. இரண்டு நாள் பங்குச்சந்தை படு வீழ்ச்சி அடைந்தாலும் இன்று சுமார் 600 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
இனிவரும் நாட்களிலும் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்