இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக சரிவில் இருந்தது என்பதும் குறிப்பாக அதானி குழும பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சுமார் 350 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்வு அடைந்ததும் 123 புள்ளிகள் நிப்டி உயர்வடைந்ததும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தந்தது.
இந்த நிலையில் இன்று ராமநவமி என்பதால் பங்குச்சந்தை விடுமுறை நாள் என்பதும் இன்றைய தினம் வர்த்தகம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாளை பங்குச்சந்தை தொடங்கும்போது ஏற்றத்தில் தொடங்கும் என்றுதான் பங்குச்சந்தை நிமிடங்கள் கணித்து உள்ளனர்.
இருப்பினும் முதன் முதலில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.