கொரோனா வைரஸ் பற்றிய பீதி உலகமெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் ஆன்லைன் டெலிவரி மூலம் கொடுக்கப்படும் பார்சல்களை மூன்று நாட்களுக்கு திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்காமல் இருக்க உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையி இப்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அந்த பொருட்களின் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க 3 நாட்களுக்கு பார்சல்களை பிரிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடினமான மேற்பரப்பில் முழுமையாக இறப்பதற்கு மூன்று ஆகலாம் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 நாட்களும் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.