அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினரிடம் தான் ஒப்படைக்க முடியும் என்றும் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கில் செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் வழக்கறிஞர் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார்.
இந்த நிலையில் அதிக தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன என்றும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சட்ட விரோத பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியவே கைது செய்யப்பட்டவரை விசாரணை செய்கின்றது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.