Publish Date: Fri, 06 Jan 2012 (12:54 IST)
Updated Date: Fri, 06 Jan 2012 (12:50 IST)
இந்தியில் வெளியான 3இடியட்ஸ் படத்தின் தமிழ் ரிமேக். ஷங்கர், இயக்கம், விஜய் ஹீரோ என்பதால் பலத்த எதிர்பார்ப்பை இப்படம் கிளப்பியிருக்கிறது.
ஜெமினி பிலிம்ஸ் நண்பனை தயாரித்துள்ளது. விஜய்யுடன் ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா, அனுயா, எஸ்.ஜோ.சூர்யா, சத்யன், சத்யராஜ், லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பது என்னுடைய நீண்டநாள் கனவு. அந்தக் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது என்று பூரிக்கிறார் விஜய். இந்த பூரிப்பு படத்தில் நடிக்கும் பிற நடிகர்களுக்கும் இருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ் பரமஹம்சா நண்பனுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எந்திரன் படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான படம் என்பதால் எந்திரனை மறந்துவிட்டு படத்துக்கு வாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார் ஷங்கர். சென்சார் இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 12 ஆம் தேதி திரையில் நண்பனை சந்திக்கலாம்.