Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.இமானுக்கு வாழ்த்து கூறிய ரஜினி, அஜித் விஜய்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (07:53 IST)
சமீபத்தில் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் அதில் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே 7 விருதுகள் கிடைத்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்த டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை கூறிவந்தனர் 
 
இந்த நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற டி இமான் அவர்களுக்கு ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை டி இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் தனக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் டி.இமான் தெரிவித்துள்ளார். அதேபோல் இளையதளபதி விஜய் அவர்களும் தல அஜித் அவர்களும் தனிப்பட்ட முறையில் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். என்னுடைய இசை பயணத்தில் இந்த வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாக இருக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments