Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ரணம் அறம் தவறேல்”திரை விமர்சனம்

J.Durai
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:15 IST)
மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்து  ஷெரிஃப் இயக்கத்தில்  வெளிவந்த திரைப்படம்"ரணம் அறம் தவறேல்"


 
இத் திரைப்படத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

சென்னையில் உள்ள அடுத்தடுத்து உள்ள காவல் நிலைய வாசலில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறது

காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி மற்றும்  குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான சிவா(வைபவ்) காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்

அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என (சிவா)வைபவ் தெரிவிக்கிறார். அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார்.  இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது.

வைபவ் தான்யா ஹோப் ஆகிய இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கின்றது

காணாமல் போன இன்ஸ்பெக்டரை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கான  காரணம் என்ன? உண்மையான கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா?  என்பது தான்  படத்தின் கதை. வைபவ் எதார்த்தமாகவும் சிறப்பாகவும் தனது நடிப்பு திறமையை கொடுத்துள்ளார்

தான்யா ஹோப் மிடுக்கான போலீஸாக சிறப்பாக நடித்துள்ளார். நந்திதா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளார்

அரோல் குரோலியின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல்  பலம். வழக்கமான க்ரைம் த்ரில்லர் படமாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு உண்மை சம்பவ கதையை மையமாக வைத்து  இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப்

 மொத்தத்தில் "ரணம் அறம் தவறேல்”நம் மனதை ரணமாக்கும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments