தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்களை தற்போது பார்ப்போம்
* ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
* சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களிலும் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு
* மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீடிப்பு
* சுற்றுலாத் தலங்களுக்கும் தடை நீட்டிப்பு
* சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி
பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்
* பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிப்பு- ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை
* மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை
* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை. எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
* மெட்ரோ ரயில் / மின்சார ரயில். திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் தடை
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு