நாட்டில் 13,984 காவல் நிலையங்களில் 1,211 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி கூட இல்லை என்று காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் காவல் நிலையங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை வழங்கப்படும். அதில் காவல் நிலையங்களில் உள்ள குறைகள், வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் 1,211 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. காவல் நிலையத்திற்கு அவசியமான முக்கியமான ஒன்று தொலைபேசி. காவல்துறையினர்களுக்கு பெரும்பாலும் தகவல்கள் தொலைபேசி மூலம் வழங்கப்படும். இந்நிலையில் இந்த அறிக்கை மூலம்தான் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 260 காவல் நிலையங்களில் ஒரு வாகனம் கூட இல்லையாம். இந்த கொடுமை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.