Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மம்தா பானர்ஜி!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (16:25 IST)
சமீபத்தில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என்ற முடிவை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று புதுவை முதல்வரும் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என்ற முடிவை அறிவித்தார் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து என்று அறிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் குஜராத் சட்டீஸ்கர் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வும் ரத்து  என கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருந்தார் என்பது தெரிந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments