கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்தார். இந்த சிறப்புத் திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 4 நாட்களாக விரிவான விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.
இன்று 5 வது நாளாக 5 வது கட்ட அறிக்கைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அதில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஏற்கனவே 61,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.இதன் மூலம் மொத்தம் 300 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்க திட்டமிடப்படுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் மூலம் பள்ளிக் கல்வியை மேம்படுத்த புதிதாக 12 கல்வி சேனல்கள் தொடங்கப்படும் ; இணைய வசதி இல்லாவதவர்களுக்கு உதவும் வகையில் டிடிஹெச் முறையில் சேனல்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கான மின்-பாடங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார்.