மஹராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்
இந்நிலையில், இந்தியாவிலேயே மஹராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 1,-9,10 ,11 ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்த நிலையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே மாத இறுதியிலும், 10 ஆம் வகுப்பு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மஹராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் அடுத்த 15 நாட்களுக்கு தடை உத்தரவு அமல்படுத்ஹ்டப்படுவதாக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.