இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மீனா, நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் த்ரிஷ்யம். இப்படம் வசூல் சாதனை புடைத்தது. அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தின் வெற்றியை அடுத்து, இப்படத்தில் 2 ஆம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் அரசு விதித்த சில தளர்வுகளுடன் வேகமாக வளர்ந்துவந்த இப்படத்தின் ஷூட்டிங் அனைத்து நடிகர்களின் பங்களிப்பில் இனியே முடிவுற்று இன்று நேற்று ஒடிடி தளத்தில் வெளியானது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் ஜித்துசோசப் விரையில் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே இப்படத்தின் தெலுங்கு ஷுட்டிங் நடைபெற்று வரும் நிலையில், கன்னடத்தில் இப்படத்தை சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே இப்படம் திரிஷ்யா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயகர், ஆஷா சரத் ,பிரபு, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தி்ற்கு இளையராக இசையமைத்தார்.
இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகத்தையும்ம் இயக்கவுள்ளார். மீண்டும் அதே கூட்டணி கன்னடத்தில் இணைகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.