இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மேலும் ஐந்து நாட்களில் 1.5 கோடிச் சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாதனை படைத்த நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு நன்றி என்றும் பிரதமர் கூறினார். கொல்கத்தா சித்தரஞ்சன் புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகத்தை காணொலியில் திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி இதனை கூறினார்.