தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேர் பெண்கள் என்றும், இரண்டு பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த தீ விபத்து தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.