நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் மனிதர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதோ இல்லையோ, மாடுகள் பாதுகாப்புடன் உள்ளது. மாடுகளுக்கு ஒன்று என்றால் பாஜக பிரமுகர்கள் சாலையில் இறங்கி போராட்டம் செய்யவும் தயங்குவதில்லை
இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஹரிஷ் வர்மா என்பவரது கோசாலையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 200 மாடுகள் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்த மாடுகள் பட்டினியால் இறந்ததாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த அவலநிலை என்றும் கூறப்படுகிறது
இறந்த மாடுகள் செய்தி குறித்து வெளியே தெரியாமல் இருக்க ஹரிஷ் வர்மா, அவசர அவசரமாக அவசரமாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் கோசாலையின் அருகே குழி தோண்டி இறந்த மாடுகளை புதைத்துவிட்டதாகவும் இந்த செய்தி வெளியே கசிந்து தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் மாடுகள் பட்டினியால் உயிரிழந்தது உண்மை என்பது தெரியவந்ததால் ஹரிஷ் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.