நாளை முதல் 1.70 லட்சம் பொதுசேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் என தகவல்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் எந்த ரெயில்களும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான்காம் கட்ட போராட்டத்தின் போது மட்டும் மத்திய அரசுக்கு சில தளர்வுகளை ஏற்படுத்தி வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. இந்த ரயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தற்போது ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்களை இயக்க போவதாக இந்தியன் ரயில்வேயை அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து தற்போது இந்த ரயில்களுக்கான அட்டவணையை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
இதனோடு தற்போது நாளை முதல் 1.70 லட்சம் பொதுசேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுன்டர்களில் 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.