இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதை நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முதல் அறிவிப்பாக மருத்துவத்துறையில் அழிந்துபோன ஹோமின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது சிறந்த கண்டுபிடிப்பதற்காக சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.