Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

23 எம்பிக்கள் சஸ்பெண்ட்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

PARLIAMENT
, புதன், 27 ஜூலை 2022 (07:55 IST)
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒரு நாள் கூட முழுமையாக பாராளுமன்ற செயல்பாடுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் அமளி செய்த எம்பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் எதிர்க் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
முதலில் பதினொரு எம்பிக்கள் அதன்பின் எட்டு எம்பிக்கள் அதன் பின் மீண்டும் ஐந்து எம்பிக்கள் என மொத்தம் 23 எம்பிக்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்தடுத்து எதிர்க் கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் இருந்து அகதிகளாக 6 பேர் இன்று தனுஷ்கோடி வருகை!