60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல நாடுகளில் பிரதமர் மற்றும் அதிபர்களே முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா வைரஸ் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.
இந்நிலையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி போடும் அதிகாரத்தை மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட விரும்புவோர் முன்கூட்டியே தங்களின் பெயர்களை மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள், கோவின் செயலி போன்றவற்றில் பதிவு செய்து கொள்ளலாம். பெயர், முகவரியுடன், ஆதார் எண் பயன்படுத்தி பதிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.