Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது குழந்தைக்கு கொரோனா: இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (10:24 IST)
3 வயது குழந்தைக்கு கொரோனா:
சீனாவில் ஆரம்பித்து இத்தாலி, ஈரான் அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் இதுவரை 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதும் அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்தது 
 
இந்த நிலையில் கேரளாவுக்கு துபாயில் இருந்து வந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து மூன்று வயது குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 
இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர்களின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை ரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களால் குரோனோ இந்தியாவிலும் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments