கொரோனா 2வது அலையை ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என தகவல்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று 3,17,532 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா அதிகருப்பது தொடர்பாக பேச மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார், நாடு முழுவதும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து கொரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளது. கொரோனா 2வது அலையை ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.