Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 20 May 2025
webdunia

அதிவேக விரைவு ரயில் மோதி 5 பேர் பலி: ஆந்திராவில் பரபரப்பு!

Advertiesment
5 Killed
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:17 IST)
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நேற்று இரவு அதிவேக விரைவு ரயில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

 
செகந்திராபாத் - கௌகாத்தி விரைவு ரயிலில் சில பயணிகள் சங்கிலியை இழுத்து மற்ற தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த புவனேஸ்வர் - மும்பை (கொனார்க் எக்ஸ்பிரஸ்) ரயில் மோதி 5 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஸ்ரீகாகுளம் எஸ்பி இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாவது, கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் யாரோ சங்கிலியை இழுத்து ஐந்து பேர் கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்த போது  எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இதனிடையே, பயணிகள் உயிரிழந்ததற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மிக உயர்ந்த உதவிகளை வழங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்குமாறு CMO-க்கு உத்தரவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இடத்தில் 20 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து: அதிர்ச்சியில் பொதுமக்கள்