சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் செய்து வருவதால், குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை நகர் முழுவதும் ஏப்ரம் மாதம் 24 ஆம் தேதி முதல் குடிநீர் விநியோகம் 5 சதவீதம் குறைக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை நகருக்கு குடி நீர் வழங்கக் கூடிய பந்துப் சுத்திகரிப்பு நிலையத்தில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் மேற்ககொள்ளப்பட்டு வருகிறது.
எனவே அங்கு குடிநீர் குறைக்கப்பட்டிருப்பதாக பிரஹன் மும்பை மாகராட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மும்பையின் புற நகர்ப்பகுதியான பந்துப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஆசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.
இங்கிருந்து மும்பை நகரின் பெரும்பாலான இடங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு 1910 மில்லியன் லிட்டர் மற்றும் 900 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 சுத்திகரிப்பு அலகுகள் உள்ளன.
இந்த நிலையில், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு 5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாகக், அங்குள்ள மக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மாநகராட்சி வேண்டுகொள் விடுத்துள்ளது.