திரையரங்குகளில் சமீபத்தில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 50 சதவீதமாக மாற்றப்பட்டிருப்பது திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த உத்தரவு தமிழகத்தில் இல்லை என்பதும் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது
கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு முதலில் 50% பார்வையாளர்களும் பின்னர் 100% பார்வையாளர்களும் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டனர்
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கட்டுக்கடங்காத வகையில் கொரோன வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தனியார் அலுவலங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது