டெல்லியில் மாசு குறைபாடு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அதிக அளவு மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் மாசு குறைப்பு நடவடிக்கையாக 500 புதிய மின்சார பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லியில் 800 மின்சார பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் தற்போதைய புதிய பேருந்துகளை சேர்த்தால் மொத்தம் டெல்லியில் 1300 மின்சார பேருந்துகளை இயக்கப்படுவதாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக அளவு மின்சார பேருந்துகளை இயங்குவது டெல்லியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது