5000 கோடி ரூபாயை வங்கி மோசடி செய்த தொழிலதிபர் நிதின் சந்தேசரா துபாயிலிருந்து நைஜீரியா நாட்டுக்கு தப்பியோட்டம்
குஜராத்தைச் சேர்ந்த மருந்து கம்பெனி அதிபர் நிதின் சந்தேசரா. இவர் தனது தொழில் சம்பந்தமாக ஆந்திரா வங்கியில் ரூபாய் 5000 கோடி அளவுக்குக் கடன் பெற்றிருந்தார். அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதுவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவரது மருந்து கம்பெனியின் சொத்துகளை முடக்கிய சி பி ஐ அவரையும் தேடி வந்தது. இதற்கிடையில் அவர் துபாயில் பதுங்கியிருப்பதாகவும் அவரை கைது செய்துள்ள சி பி ஐ அவரை விரைவில் இந்தியா கொண்டுவர உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் தற்போது அவர் துபாயில் இல்லை என்றும் துபாயில் இருந்து ரகசியமாக நைஜீரியாவுக்குத் தப்பி சென்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நைஜீரியா நாட்டோடு நம் நாடு, கைதிகள் ஒப்படைப்பு சம்மந்தமான ஒப்பந்ததிலோ சட்ட ரீதியான ஒப்பந்த உறவுகளிலோ இதுவரை கையெழுத்திட்டதில்லை என்பதால் அவரை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.