Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 26ல் ராஜ்யசபா தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:55 IST)
மார்ச் 26ல் ராஜ்யசபா தேர்தல்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 55 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அதற்கான தேர்தல் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்திலும் 6 ராஜ்யசபா எம்பி தேர்தலும் அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ஆம் தேதி என்றும் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி தேவைப்பட்டால் தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் ஆறு எம்பிகள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments