கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசின் கல்வித்துறை தெரிவித்துள்ளது
இதனை அடுத்து பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிகள் முழுவதும் சானிடைசர் வைத்து தூய்மைப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளில் உட்கார வேண்டும் என்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது