பெகாசஸ் என்ற செயலியின் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது
ஆனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்பட பலரது செல்போன் ஒட்டுக்கேட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் திராவிட இயக்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், திராவிட கழகத்தைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர்களின் செல்போன்களும் பெகாசஸ் உளவு செயலின் மூலம் ஓட்டு கேட்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது