அரபிக் கடலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிபர்ஜாய் புயல் மையம் கொண்டிருந்த நிலையில், இது அதிதீவிர புயலாக நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.
இந்தப் புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், புயல் கரையைக் கடந்த 140 கிமீ வேகத்தில், குஜராத்தில் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
இந்த புயலின்போது, மொத்தம் 1171 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். இதில்ப் 707 கர்ப்பிணிகள் குழந்தைகள் பெற்றெடுத்தனர்.
இதுபற்றி குஜராத் மாநில சுகாதாரத்துறை முன்பே கர்பிணிகள் பட்டியலை தயார் செய்து இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, கர்ப்பிணிகள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
இந்த நிலையில், பிபர்ஜாய் புயலின்போது குஜராத்தில் 770 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.