Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!

Advertiesment
Indian Railway jobs 2025

Prasanth Karthick

, திங்கள், 21 ஏப்ரல் 2025 (09:20 IST)

இந்திய ரயில்வேயில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்திய ரயில்வேக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் ரயில்வே தேர்வாணையம் மூலமாக 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதியாக ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக் என சம்பந்தப்பட்ட துறைசார் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

 

விண்ணப்பிக்க வயது வரம்பு ஜூன் 1, 2025-ன் படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ரிசெர்வேஷன் ரீதியில் 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் தேர்வு, ஆவணம் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை படிநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க மே 5ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும், மேலதிக விவரங்களை பெறவும் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Thanks, Please சொல்ல வேண்டாம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகிறது: ChatGPT ஓனர்..!