Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!
, வெள்ளி, 22 ஜூன் 2018 (15:21 IST)
திரிபுராவில் பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் மண்சரிவில் இருந்து ரயிலை காப்பாற்றி அதில் பயணம் செய்த 2000 மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். 
 
திரிபுராவின் தன்சேரா பகுதியில் வசித்து வருகிறார் சுமதி என்ற 9 வயது சிறுமி. அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் அவரின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார். 
 
அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால் பல இடங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்போது மண்சரிவை அறியாத நிலையில் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
 
ரயில் வருவதை கவனித்த சிறுமி உடனடியாக தனது சட்டையை கழற்றி ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டினார். ரயில் ஓட்டுனர் இதை கவனித்ததால் ரயிலை நிறுத்தினார். இதனால், 2000 மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. 
 
இந்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் அரசியல் குறித்த போஸ்டர்கள்: செல்லூர் ராஜூ கூறும் விளக்கம்