Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டான்ஸ் ஆடிய மணப்பெண் மயங்கி விழுந்து பலி! - துக்க வீடான திருமண வீடு!

Advertiesment
Bride death while dance

Prasanth Karthick

, செவ்வாய், 6 மே 2025 (10:47 IST)

உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேசத்தின் படாவூன் மாவட்டத்தில் உள்ள நூர்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

 

அதில் மணப்பெண்ணும், குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் நடனமாடியுள்ளனர். அப்போது மணப்பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

 

மணப்பெண்ணிற்கு உடல்ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை நன்றாகத்தான் இருந்தார். அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததை நம்பவே முடியவில்லை என சொல்லி அழுகின்றனர் அவரது பெற்றோர், உறவினர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய் உயர்வு..!