Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணமகனின் வரதட்சணைப் பட்டியலைக் கேட்டு அதிர்ந்து போன பெண் வீட்டார்

Advertiesment
ஒடிசா
, திங்கள், 25 ஜூன் 2018 (15:16 IST)
புவனேஸ்வரில் மணமக்ன் ஒருவர் மணமகளின் வீட்டாரிடம் கேட்ட வரதட்சணை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலப்த்ரபூர் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜ் காந்த் பிஸ்வால். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சரோத் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரை திருமண செய்ய முடிவு செய்தார்.
ஒடிசா
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது ஆசிரியர் பெண் வீட்டாரிடம் எனக்கு பணமோ, நகையோ, வாகனமோ, ஆடம்பரப் பொருட்களோ எதுவும் வரதட்சணையாகத் தேவையில்லை. கல்யாணத்தைக் கூட சிம்பிலாக செய்யுங்கள். ஆனால் நான் கேட்பதை மட்டும் வரதட்சணையாக கொடுங்கள் என்றார். இதனால் மணமகள் வீட்டார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
ஒடிசா
சட்டென்று அவர் எனக்கு வரதட்சணையாக 1000 மரக்கன்றுகளை கொடுங்கள், அதனை திருமணத்திற்கு வருபவர்களிடம் கொடுத்து விடலாம் என்றார். இதனைக்கேட்டு பெண்வீட்டார் சந்தோஷமடைந்தனர்.  அதேபோல் திருமணத்தின் போது மணமகனுக்கு 1000 மரக்கன்றுகள் வரதட்சணையாக அளிக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமகனின் செயலை வாழ்த்தினர். சமூக வலைதளங்களிலும் மணமகனின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 ஆண்டுகளா? ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார்: மு.க.ஸ்டாலின் பதிலடி