Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சீட்டு முறை கொண்டுவந்தால் எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும்: தேர்தல் ஆணையம்

Mahendran
புதன், 17 ஏப்ரல் 2024 (13:21 IST)
மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு தான் நடைபெற்று வருகிறது என்பதும் வாக்குச்சீட்டு முறை தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்தது.

மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய போதிலும் விஞ்ஞான ரீதியாக அதை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இது குறித்த வழக்கு என்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

அப்போது இந்தியாவில் 97 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும் தேர்தல் ஆணையர் கூறிய போது வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்தால் 97 கோடி பேர் பேரின் வாக்குகளை எப்போது எண்ணிக்கை முடிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் 97 கோடி பேரின் வாக்குகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தது. ஆனால் மின்னணு முறையில் வாக்கு பதிவு செய்தால் அதிகபட்சம் 24 மணி நேரத்தில் எண்ணிவிடலாம் என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments