ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் படிப்பிற்காக நீண்ட தூரம் நடந்து அவதிப்பட்டு வந்த மாணவிகளுக்கு தனது பிஎஃப் பணத்தில் பஸ் வாங்கி விட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில். ரமேஷ்வர் பிரசாத் யாதவ் என்ற மருத்துவர் தனது மனைவியுன் காரில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு மாணவிகள் மழையில் நனைந்தபடி அவர்களிடம் லிஃப்ட் கேட்டுள்ளனர்.
அவர்கள் அந்த மாணவிகளுக்கு லிஃப்ட் கொடுத்துள்ளனர். அப்போது அந்த மாணவிகள் தாங்கள் தினமும் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து அந்த மருத்துவரிடம் தெரிவித்தனர். கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் எங்கள் கிராமத்தில் இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு தினமும் 6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். மழையோ அல்லது வெயிலோ தினமும் நடந்து தான் சென்று வருகிறோம் சில சமயம் இளைஞர்கள் சிலர் எங்களிடம் அத்துமீறுவார்கள் என அந்த மாணவிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டதிலிருந்தே அப்செட்டாக இருந்த மருத்துவர் பிரசாத், தனது பிஎஃப் பணத்திலிருந்து 17 லட்சம் ரூபாயை எடுத்து தனது கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை போட்டு 19 லட்சத்தில் புதிதாக மாணவிகளுக்கு பஸ் வாங்கி விட்டுள்ளார். அதில் மாணவிகள் தினமும் இலவசமாக கல்லூரிக்கு பயமின்றி சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய அந்த மருத்துவர், உடல்நலக்குறைவால் எங்கள் குழந்தை சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டது. ஆனால் நான் இப்பொழுது நான் செய்த இந்த உதவியால் எனக்கு புதிதாக 50 பெண் பிள்ளைகள் கிடைத்திருக்கும் திருப்தியை அடைந்துள்ளேன் என அவர் ஆனந்தமாக தெரிவித்தார். சுயநலமிக்க இந்த உலகத்தில் இப்படியும் சில மனிதர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.