செல்போன் மோகத்தால் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
பெங்களூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் சுஷ்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர்.
இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சுஷ்மா வீட்டிலிருந்து வெளியேறி ராஜை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்க, அதனை கெடுக்கும் விதமாக சுஷ்மா நடந்துகொண்டார். எந்நேரமும் போனும் கையுமாக இருந்துள்ளார். வீட்டு வேலையை கூட செய்யாமல் போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ராம் எவ்வளவு கூறியும் சுஷ்மா கேட்கவில்லை. பின்னர் ராஜ் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்ததில் அவர் பலருடன் இணையத்தில் சாட் செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜ் தீம்பார்க் செல்வோம் என கூறி தனது மனைவியையும் 3 மாத கைக்குழந்தையையும் கூட்டிச் சென்றார். தைலமரக்காட்டில் வண்டியை விட்ட ராஜ், மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தான், பிஞ்சுக்குழந்தை என்றும் பாராமல் குழந்தையையும் கொலை செய்தான். பின்னர் அவர்களை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றான்.
2 நாட்கள் கழித்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற போலீஸார், அங்கிருந்த உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே சுஷ்மாவும் தனது பேரக்குழந்தையும் காணவில்லை என சுஷ்மாவின் தந்தை போலீஸில் புகார் அளித்திருந்தார். மருமகன் ராஜ் மீது சந்தேக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் ராஜை பிடித்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. போலீஸார் ராஜை கைது செய்தனர். செல்போனால் ஒரு குடும்பமே சீரழிந்தது அப்பகுதியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.